|
கீழக்கரையின் முதல் காஜி
ஹழ்ரத காஜி பஹாவுதீன்
பின் அல்ஹாபிழ் மக்தூம் முல்லா
அஹ்மது அல் யமனி அல் பகரீயி
ஹழ்ரத காஜி மக்தூம் பஹாவுதீன்
அவர்களின் தந்தை அல் ஹாபிழ் மக்தூம் முல்லா அஹ்மது அல் யமனி அல் பகரீயி
அவர்கள் அண்ணல் நபி ( ஸல் )அவர்களின் அருமைத்தோழர் முதல் கலீபா
செய்யிதினா ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் ( ரலி )அவர்களின்
இருபத்தி ஏழாவது வது
வழித்தோன்றல் ஆவார்
இவர்களின்
அடக்கத்தலம் இராமனாதபுர -
மதுரை நெடுஞ்சாலை வலப்புரம் ை சிலைமான் கிராமத்தில் அமைந்துள்ளது


1.ஹழ்ரத் அபூபக்கர்
ஸித்தீக் (ரலி) அவர்களின் வமிசா வழித்தொடர்
2.ஹழ்ரத ஹழ்ரத்
அப்துல்லாஹ்(ரலி)
(இவர்கள் தான்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயண ஏற்பாடுகளில் பங்கேற்றவர்கள்)
3.ஹழ்ரத்
அபூ சயீத் (ரலி
4.ஹழ்ரத்
அபூ சஅத் ரஹ்)
4.ஹழ்ரத்
இஸ்ஹாக் (ரஹ்)
5.ஹழ்ரத்
ஈஸா
(ரஹ்)
6.ஹழ்ரத்
இல்யாஸ் (ரஹ்)
7.ஹழ்ரத்
அப்துர் ரஹ்மான் (ரஹ்)-
இவர்கள் எமன் நாட்டின் கவர்னராக விளங்கியவர்கள்
8.ஹழ்ரத்
மக்தூம் இப்ராகீம் (ரஹ்)
10.ஹழ்ரத்
மக்தூம் ஹுசைன் (ரஹ்)
11.ஹழ்ரத்
மக்தூம் ஜாபிர் (ரஹ்)
12.ஹழ்ரத்
மக்தூம் அஹ்மது (ரஹ்)
13ஹழ்ரத்
மக்தூம் சாலிம் (ரஹ்)
14.ஹழ்ரத்
மக்தூம் ஸாலிஹ் (ரஹ்)
15.ஹழ்ரத்
மக்தூம் ஜக்கரிய்ய
16.ஹழ்ரத்
மக்தூம் அப்துல் கரீம்
(ரஹ்)
17.ஹழ்ரத்
மக்தூம் யஹ்யா ஷரபுத்தீன் (ரஹ்)
18.ஹழ்ரத்
மக்தூம் ஷம்சுத்தீன் (ரஹ்)
19.ஹழ்ரத்
மக்தூம் தாஹா (ரஹ்)
20.ஹழ்ரத்
மக்தூம் பஹாவுத்தீன் (ரஹ்)
21.ஹழ்ரத்
மக்தூம் ஸ்த்ருத்தீன் (ரஹ்)
22.ஹழ்ரத்
மக்தூம் ஷாஹ் ருக்னுத்தீன் (ரஹ்)
23.ஹழ்ரத்
மக்தூம் ஹாமித்தீன் (ரஹ்)
24.ஹழ்ரத்
மக்தூம் காசிம் (ரஹ்)
25.ஹழ்ரத்
மக்தூம் நூஹ் (ரஹ்)
26.ஹழ்ரத்
மக்தூம் ஷைய்கு ஜமாலுத்தீன் (ரஹ்)
இவர்களின் புதல்வர்
27.அல் ஹாபிழ் மக்தூம் முல்லா
அஹ்மது அல் யமனி அல் பகரீயி
(இவர்களின் அடக்கத்தலம் மதுரை அருகில் சிலைமான் என்ற ஊரில் பிரதான சாலை அருகில்
அமைந்துள்ளது ) இவர்களின் புதல்வர்
1.ஹழ்ரத காஜி பஹாவுதீன் (ரஹ்)
கீழக்கரையின் முதல் காஜி ஆவார். இவர்களைத்தொடர்ந்து
2.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் I
(ரஹ்)
3.ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் I
(ரஹ்)
4.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் II
(ரஹ்)
5.ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் II
(ரஹ்)
இக்காஜி அவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் II மறைவுக்குப்பின்காஜியாராக
பொறுப்ப்பேற்றார். கீழக்கரையில் சரித்திர
புகழ்வாய்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்கயர் ஜும்ஆ பள்ளியை நிர்மாணம் செய்து
வக்ப் செய்து அதன் பாரம்பரிய மஹல்லி மிராசு முத்தவல்லியாக அவரது நண்பரும்
நகரின் 5வது காஜியிமான காஜி ஷேக் அப்துல்லாஹ் 2 அவர்களை நியமனம் செய்தார் (இவர்களின்
அடக்கத்தலம் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் கபுரருகில் உள்ளது )

;; 
6. ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III
(ரஹ்)
இக்காஜி அவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி காஜி ஷேக் அப்துல்லாஹ
II ,
மறைவுக்குப்பின்
6வது காஜியாராக ஜும் ஆ பள்ளி
2 வது மஹல்லி மிராசு
முத்தவல்லியாக
பொறுப் பேற்றார் ,ஜும் ஆ மஸ்ஜிதின் இமாமாக சேவையாற்றியதுடன் சன்மாக்க அற-நெறி
போதனைகளை செய்து ஜும் ஆ மஸ்ஜித் மத்ரஸாவில் மாணவர்களுக்கு மார்க்க கல்வி
புகட்டினார்கள வல்ல அல்லாஹ் இவர்களின் கப்ரை
பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
7.
ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் III
(ரஹ்) ( Hijri 1160-1245 )
இக்காஜி அவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி முஹம்மது
கியாதுத்தீன் III மறைவுக்குப்பின் 7 வது காஜியாராக ஜும் ஆ பள்ளி
3வதுமுத்தவல்லியாக.,ஜும்ஆமஸ்ஜிதின்இமாமாகபொறுப் பேற்றார் சன்மாக்க கல்வி
போதனையை ஜும ஆ மஸ்ஜிதின் மத்ரஸத்துல் ஜாமிஆவில் செய்துவந்தார்கள் இவர்கள்
ஆற்காடு நவாபின் பிரதிநிதியாகவும் அங்கீ்கரிக்கப்பட்ட தென்கிழக்கு
பிராந்தியத்தின் காஜிஆவார் ஆற்காடு நவாப் இக்காஜியின் பொறுப்பில் ஏர்வாடி
தர்ஹா மற்றும் கிராம நிர்வாகத்தை வழங்கினார்
இவர்கள் தங்களின்
தோட்டத்தில் 225 ஆண்டுகளுக்கு முன் இவர்களின் துணைவியாரை அதன் கிணற்றின்
அருகில் அடக்கி அதனை பொது கபரஸ்தானுக்காக அர்ப்பணித்தார்கள். இது ஜும் ஆ
ம்ஸ்ஜிதின் தென்புறம் பெரிய கோட்டை என அழைக்கப்படும் கபரஸ்தான் ஆகும். இவர்கள் மீது இவர்களின் புதல்வர்-அல்ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத் காஜி முஹம்மது
கியாதுத்தீன் V வலியுல்லாஹ்
இவர்கள் மீது மர்திய்யா இயற்றினார்கள்
இவர்களுக்கு
முகலாய ஆட்சியர் மற்றும் நவாப்கள் எழுதிய கடிதங்களில் காஜி
- பந்தர்
கீழக்கரை"(துறைமுகத்திற்கு பார்ஸியில்" பந்தர் ")என
குறிப்பிட்டுள்ளார்கள். அக்காலகட்டத்தில் இது ஓர்சிறந்த துறைமுகப்பட்டிணமாக
இருந்தது. இவர்கள் தொடர்புடைய 250 ஆண்டு பழைமையான
ஆவணங்கள் இன்றைய
காஜியாரின் செயலகத்தில் உள்ளது
.வல்ல அல்லாஹ் இவர்களின் கப்ரை
பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
இக்காஜி அவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III
மறைவுக்குப்பின் 7 வது காஜியாராக ஜும் ஆ பள்ளி 3 வது மஹல்லி
மிராசு முத்தவல்லியாக ஜும்ஆ மஸ்ஜிதின இமாமாக
பொறுப்பேற்றார் இவர்கள் ஆற்காடு நாவாபின் பிரதிநிதியாகவும் அங்கீக்கரிக்கப்பட்ட தென்கிழக்கு
பிராந்தியத்தின் காஜியும் ஆவார்ஆற்காடு நவாப் இக்காஜியின் பொறுப்பில் ஏர்வாடி
தர்ஹா மற்றும் கிராமத்தை வழங்கினார்.
1245 ஹிஜ்ரி
ஸபர் பிறை 5 இல் வபாத் ஆனார்கள். வல்ல அல்லாஹ் இவர்களின் கப்ரை
பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
8.
ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன்
வலியுல்லாஹ்
IV
(ரஹ்)
-
( மறைவு :
ஹிஜ்ரி
1345 ஷவ்வால் பிறை 16 )
திருகுர் ஆனை மனனம் செய்த ஹாபிழான இவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ்- III
மறைவுக்குப்பின் 8வது காஜியாராக ஜும் ஆ பள்ளி 4 வது மஹல்லி மிராசு
முத்தவல்லியாக ,ஜும் ஆ மஸ்ஜிதின் இமாமாக சேவையாற்றியதுடன் சன்மார்க்க அற-நெறி
போதனைகளை செய்து ஜும்ஆ மஸ்ஜித் மத்ரஸாவில் மாணவர்களுக்கு மார்க்க கல்வி
புகட்டினார்கள் வல்ல அல்லாஹ்வை துதி - திக்ர் செய்து இறை அன்பைப்பெற
ராத்திபதுல் கியாதிய்யாவை தொகுத்தளித்த இவ்விறைநேசச்செல்வர் ஆவார்.
அல்லாஹ்வைப் புகழ்ந்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை வாழ்த்தியும் ஷுஹதாக்கள்
இறை நேசச்செல்வர்கள் மீதும் பல அருமையான
கஸீதாக்களை இயற்றியுள்ளார்கள்.
இக்காஜி அவர்களின் மாமனார் அல்லாமா சீனி முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள். இப்பெரியார் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது அழகிய மவ்லிது
ஷரீப் இயற்றியவர்கள் ,இவர்கள் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின்
மாமனார் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வஸியத்தின் படி
அவர்களுக்காக ஜனாஸா தொழுகையை இவர்கள்
நடத்தினார்கள்
இப்பெரியாரின் அடக்கத்தலம் பழைய குத்பா பள்ளி - மீன் கடைகளின் வடபுறம்
உள்ளது இவ்வறிஞரின் மாமா அபூபக்கர் லெப்பை ஆலிம் இப்னு ஹுசைன்
இப்ராஹீம் லெப்பை ஆலிம் அவர்கள் (இவர்களின் அடக்கத்தலம்
ஹமீதியா ஆண்கள் மேனிலைப்பள்ளி சாலையில் ஷேக் அப்பா அவர்கள் அடக்கத்தலம்
அருகில் உள்ளது
). வல்ல அல்லாஹ் இவர்களின் கப்ரை பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
9.
ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் சாஹிப் பகதூர்
(ரஹ்)
The First Chaiman of the
Kilalakarai Panchayat Board
மறைவு
:
ஹிஜ்ரி 1296
ரபீவுல் ஆகிர் 11
இக்காஜி அவர்கள் தமது தந்தையார் ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் IV
சிலோன் மாதம்பை சென்ற போது வழங்கிய பொறுப்பின் படி 9 வது காஜியாராக
ஜும்ஆ பள்ளி 5 வது மஹல்லி மிராசு முத்தவல்லியாக ,ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமாக
சேவையாற்றியதுடன் கீழக்கரையின் பஞ்சாயத் போர்டின் முதல் தலைவராகவும் ,அன்றைய
பெரும் மாவட்டமாக விளங்கிய மதுரை மாவட்டத்தின் தாலுகா
போர்டு , மாவட்ட போர்டு
உறுப்பினராகவும் பணியாற்றினார்கள் இவர்கள் காலத்தில் கீழக்கரை சாலைகள்
சீரமைக்கப்பட்ட்ன, ஊர் நலப்பணிகள் பல நடைபெற்றன.
அன்றய அரசின் அங்கீகாரம்
பெற்ற பிராந்திய
அரசு காஜியாகவும்
அன்றைய அரசால் நியமிக்கப்பட்டு சேவையற்றினார்கள்
சாஹிப் பஹதூர் என்ற சிறப்பு
பட்டமும் அன்றைய அரசால் அவர்களுக்கு வழங்கப்ப்பட்டது. வல்ல அல்லாஹ்
இவர்களின் கப்ரை பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
------------------------------------------

10.ஹழ்ரத் ஹாபிழ்
காஜி முஹம்மது கியாதுத்தீன் சாஹிப் பகதூர்
V
(ரஹ்)
- மறைவு :
ஹிஜ்ரி 1380
ஷவ்வால் 5
திரு குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் ஆன இக் காஜி
தமது தந்தையாரின் சாசனப்படி 10 வது காஜியாராக ஜும் ஆ பள்ளி 6 வது மஹல்லி
மிராசு முத்தவல்லியாக
பொறுப்பேற்றார். ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமாக நீண்ட காலம்
சேவையாற்றியுள்ளார். இவர்களின் சகோதரர் ஹழ்ரத் மஹானந்தபாபா முஹம்மது அப்துல் காதிர் வலியுல்லாஹ்
ஆவார். இவர்கள்
தமது பெரியம்மா அஹ்மது நாச்சியாரின் பேத்தியும் முஹம்மது முஸ்தபா அவர்களின்
புதல்வியுமான மஹ்மூது நாச்சியாரை மணந்தார் ,இவ்வம்மையாரின் சகோதரியின் புதல்வியர்
இருவரை இவர்களது இருபுதல்வர் 11,12வது காஜிகள் மணந்தனர் வல்ல அல்லாஹ்
இவர்களின் கப்ரை பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக. இக்காஜிகளின் மனைவியின் சகோதரியின் புதல்விதான் 13வது காஜியின் தாயாராவார்.
--------------------------------------------

11.ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம்
பாஜில் நூரிய்யி (ரஹ்)
பிறப்பு :
ஹிஜ்ரி 1330
ஜமாதுல் அவ்வல் 8
,
மறைவு :
ஹிஜ்ரி
1413 (27.11.92)
பொதக்குடி அல் ஆரிபுபில்லாஹ் ஸூபி அப்துல் கரீம்
ஹழ்ரத் அவர்களின் மாணவராவார். தமது தந்தையார் ஹழ்ரத் காஜி முஹம்மது
கியாதுத்தீன் V மறைவுக்குப் பின் 1963ஆம் ஆண்டு
11 வது காஜியாராக ஜும்ஆ பள்ளி 7 வது மஹல்லி மிராசு முத்தவல்லியாக பொறுப்பேற்றார்கள்,
ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமாக
நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார் ஹழ்ரத் மஹானந்தபாபா
முஹம்மது
முஹம்மத் அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்ஹா டிரஸ்டின் ஸ்தாபக தலைவராவார்கள்
ஏர்வாடி காட்டுப்பள்ளி-மஸ்ஜித் இலாஹிய்யாவின் ஸ்தாபக முத்தவல்லியாவார்.
கீழக்கரையில் தென் இந்திய இஸாஅத்துல் இஸ்லாம் சபை, ஜும்ஆ மஸ்ஜித்
முன்னேற்ற சங்கம், ஜமாஅத்துல் உலமா சபை , இவற்றை நிர்மாணம் செய்வதில்
முக்கிய பங்கேற்றதுடன் ஹழ்ரத் தைக்கா அஹ்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின்
தலைமையிலான கீழக்கரை ஜமாஅத்துல் உலமா சபையின் ஸ்தாபக பொதுச்செயலாளர் ஆக
விளங்கினார்கள்.
இந்திய விடுதலைப் போரில் பல கவிதைகளை இயற்றி
விடுதலை தாகத்தை ஊட்டிய அரபி,பார்ஸி,உருது ,தமிழ் கவிஞர் - விடுதலை வீரர்
ஆவார் அல்லாஹ்வை துதி செய்தும்
, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும்,
அஹ்லபைத்துகள் மீதும்
,இறைநேசச்செல்வர்களின் மீதும்
,பல அரபி கஸீதாக்களை
இயற்றிய மிகச் சிறந்த அரபு இலக்கிய மேதையாவார். பல ஆண்டுகள் மாவட்ட
ஜமாஅத்துல் உலமா சபையின் பத்வா குழுத்தலைவாராக விளங்கினார்
அல்லாமா அவர்கள் நபிமார்கள் பெயரால் சொன்ன பைத்
இதை
அழுத்தவும்
வல்ல அல்லாஹ்
இவர்களின் கப்ரை பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.(
இவர்களின் அடக்கத்தலம்
வள்ளல் சீதக்காதி அவர்களின் கப்ர் அருகில் உள்ளது
)


--------------------------------------------------

12.ஹழ்ரத் காஜி அல் ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் (ரஹ்)
இக்காஜி தமது சகோதரர் ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம்
பாஜில் நூரிய்யி மறைவுக்குப்பின் 1992ஆம் ஆண்டு 12 வது காஜியாராக
பொறுப்ப்பேற்றார்கள். ஜும் ஆ பள்ளி 8வது மஹல்லி மிராசு முத்தவல்லியாக,ஏர்வாடி
காட்டுப்பள்ளி-மஸ்ஜித் இலாஹிய்யாவின் முத்தவல்லியாக, ஹழ்ரத் மஹானந்தபாபா
முஹம்மது அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்ஹா
டிரஸ்டின் தலைவராக
பொறுப்பேற்றார்கள்
சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் மாக்க கல்வி
பயினற இவர்கள் ,தமது சிறிய தந்தையார் உஸ்தாத் சீனி முஹம்மது
லெப்பை அவர்களைத் தொடர்ந்து மத்ரஸத்துல் ஜாமியாவின் ஆசிரியராக
சேவையாற்றியுள்ளார்கள்
இவர் தமது பாட்டனார் மாதம்பை ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத் முஹம்மது
கியாதுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள் இயற்றிய அரபி கஸிதாகள் மற்றும்
ராதிபத்துல் கியாத்திய்யா, சிறிய தந்தையார் ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத்
மஹானந்தபாபா முஹம்மது அப்துல் காதிர் வலியுல்லாஹ் இயற்றிய அரபி நூற்கள், தமது
சகோதரர் ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி இயற்றிய அரபி
நூற்களை பல முறை மறுபதிப்பு செய்துள்ளாரகள்.ஏர்வாடி காட்டுப்பள்ளி-மஸ்ஜித்
இலாஹிய்யாவை நிர்மாணம் செய்வதிலும்
பெரும் பங்காற்றியுள்ளார். 2000 ஆம்
ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவு செய்துள்ளார். வல்ல அல்லாஹ் இவர்களின் கப்ரை
பிரகாசமாக்கி அருள்பாலிப்பானாக.
=====================================================================
1.ஹழ்ரத் காஜி பஹாவுதீன்
2.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் I
3.ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் I
4.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் II
5.ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் II
(முகலாய மன்னர் அவுரங்கசீப்
காலம்)
6.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III
7.ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் III ( Hijri 1160-1245 )
8.ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் IV ( Hijri 1296 )
9.ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் சாஹிப் பகதூர் (H 1346)
10.ஹழ்ரத் காஜி ஹாபிழ் முஹம்மது கியாதுத்தீன் V (
H 1379)
11.ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி (H 1413)
12.ஹழ்ரத் காஜி முஹம்மது அப்துல் காதர் ஆலிம் (H 1427)
|